தீர்மானம் நிறைவேற்றி சிலை அமைக்காத நெல்லை மாநகராட்சி
தீர்மானம் நிறைவேற்றி சிலை அமைக்காத நெல்லை மாநகராட்சியால் எழுத்தாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 11:50 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலகம்
திருநெல்வேலியை சேர்ந்த தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தனின் 76வது நினைவு நாள் நேற்று (ஜூன் 30) அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்பும் வகையில் பாளையங்கோட்டை மேலக்கோட்டை வாசல் பூங்காவில்,
அவருக்கு மார்பளவு சிலை எழுப்ப திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதுவரை சிலை அமைக்கப்படவில்லை என எழுத்தாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.