ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
ஈங்கூர் ரயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-19 13:06 GMT
முதியவர் தற்கொலை
ஈங்கூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) தெரிய வந்தது. இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் குணமாகாததால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக வீட்டாரிடம் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.