கிராம சபை : கதறி அழுத மூதாட்டி, ஆறுதல் கூறிய ஆட்சியர்

குடியிருக்க வீடு இல்ல என கிராம சபை கூட்டத்திற்கு வந்த 80 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-02 06:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது புத்தேந்தல் ஊராட்சி. இந்த பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் கிராமசபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென கூரியூர் கிராமத்தைச் சார்ந்த 80 வயது மூதாட்டி ஆறுமுகம் அம்மாள் கூட்டத்திற்குள் புகுந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் காலில் கும்பிட்டு விழுந்து கதறி அழுதார். என்னவென்று ஆட்சித் தலைவர் கேட்டபோது, ஐயா எனக்கு 80 வயது ஆகிறது குடியிருக்க இதுவரை வீடு வாசல் இல்லை 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டிக் கொடுத்த வீடு இடிந்து விட்டது ஆகையால் தகர அட்டையால் மூடி வீடு போல் பாவித்து வாழ்ந்து வருகிறேன்- குடியிருக்க வீடு ஒன்றை கட்டிக் கொடுத்தால் நான் நிம்மதியாக வாழ்ந்து மறைந்து விடுவேன் எனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி தாருங்கள் என ஆட்சி தலைவரிடம் காலில் விழுந்து கதறியதால் கூட்டத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது இதை சற்றும் எதிர்பாராத ஆட்சி தலைவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த அம்மாவின் கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக வீடு கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் நீங்கள் போய் வாருங்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறி அனுப்பி வைத்தார். அதன் பின்பு ஊராட்சி மன்ற தலைவரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்து வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


Tags:    

Similar News