அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் பலி
தேவகோட்டையையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-22 04:48 GMT
அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் பலி
தேவகோட்டையை சேர்ந்தவர் ரங்கநா தன்(46). எலக்ட்ரீஷியன். சம்பவத்தன்று கடியாபட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் வழியில் திருமயம் வந்த அவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தினார். அள வுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், போதை தலைக்கேறியதால் திருமயம் பஸ் நிலையத்திலேயே உறங்கினார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்க மடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரங்கநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.