கோவில் தேர் அருகே இறைச்சி கழிவுகளை கொட்டியவர் கைது!
கோனியம்மன் கோவில் தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசி சென்ற இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை காந்தி பார்க் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருபவர் முகமது அயாஸ்.இவர் கடையில் மிச்சமாகும் மட்டன் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை ராஜவீதி பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில் தேர் அருகில் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் வெரைட்டி கால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் காந்திபார்க் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இறைச்சி கழிவுகளை எடுத்து வந்து ராஜவீதியில் தேரின் அருகில் வீசி சென்று இருப்பதாக புகார் அளித்தார்.இந்து மதத்தினரிடையே அமைதியை குலைத்து மதகலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக புகாரில் தெரிவிக்கபட்டு இருந்ததன் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A(சாதி,மத,இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளை தூண்டுதல்) 290 (தொல்லை கொடுத்தல்) 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அயாஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.