காட்டு பன்றியை வேட்டையாடியவர் கைது -நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

Update: 2023-12-17 08:47 GMT

பைல் போட்டோ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் காட்டு பன்றியை சிலர் வேட்டையாடி இருப்பதாக மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனவர் ஐயப்பன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று வேலுச்சாமி என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குக்கரில் காட்டு பன்றி கறியை சமைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வீட்டில் வேறு ஏதேனும் வன விலங்குகளின் பாகங்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகள் இருப்பதை கண்டுபிடிக்கபட்டது.

Advertisement

இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வேலுச்சாமியை கைது செய்து தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வேலுச்சாமியிடம் வனத்துறையினர் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி எங்கிருந்து வாங்கப்பட்டது,யார் தயாரிக்கிறார்கள் என்பது குறித்தும் நாட்டு வெடியை வைத்து என்னென்ன வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டது என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் அவ்வப்போது நாட்டு வெடியை கடித்து யானைகள் உயிரிழந்து வரும் சூழலில் இதுபோன்று சட்டவிரோதமாக நாட்டு வெடியை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது காவல்துறையும், வனத்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News