மொபைல் போன் தர மறுத்தவரை தாக்கி கொலை மிரட்டல்
ஜக்கம்மாள்புரம் பகுதியில் மொபைல் போனை தர மறுத்த நபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Update: 2024-02-05 02:15 GMT
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜக்கம்மாபுரம் பகுதியில் வசித்து வரும் நபர் அருண்குமார் வயது 26 இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வருவதாகவும், கடந்த ஒன்றாம் தேதி இவர் ஜக்கம்மார்புரம் பகுதியில் இருந்த போது அங்கு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அஜய்குமார் ஆகிய இருவரும் அருண்குமாரிடம் தொலைபேசியை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அருண்குமார் தொலைபேசியை தர மறுத்த காரணத்தினால் அவரை குறைவாக பேசி கையில் இருந்தால் மது பாட்டிலால் தலையில் அடித்து ரத்த காயத்தை ஏற்படுத்தி இனிமேல் எது கேட்டாலும் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அருண்குமார் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.