மது விற்பனை செய்தவர் கைது
அன்னஞ்சி தேனி புதிய பேருந்து நிலையம் சாலையில் மது விற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துரையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-13 05:33 GMT
மது விற்பனை செய்தவர் கைது
தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னஞ்சி தேனி புதிய பேருந்து நிலையம் சாலையில் சார்பாய்வாளர் பாண்டியம்மாள் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த மதுரை வீரகனுர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.