நுங்கு வெட்ட சென்றவர் மரத்தில் இருந்து விழுந்து பலி

சேலம் மாவட்டம், பச்சகாடு பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த பலியான இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

Update: 2024-05-08 02:35 GMT

பலியான சந்தோஷ்குமார்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பச்சகாடு பகுதியை சேர்ந்த மணி மகன் சந்தோஷ்குமார் (வயது 22). கூலிதொழிலாளி. இவருக்கு திருமணம்ஆகவில்லை. நேற்று காலை பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் இறந்து விட்டார். சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி, சந்தோஷ்குமார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். பின்னர் சந்தோஷ்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News