காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தர்மபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-02-14 09:06 GMT

நீதிமன்றம் 

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது இவருக்கு வயது 39 இவர், கடந்த 2014ம் ஆண்டு வட்டாட்சியர் பயன்படுத்தும் முத்திரையை போலியாக தயாரித்து வழங்கி உள்ளார். இது தொடர்பாக அப்போதைய அரூர் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது காவல் ஆய்வாளர் பவுலோஸிடம் விசாரணை மேற்கொள்ள, நீதிமன்றம் அழைப்பு விடுத்தது. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை. இதையடுத்து, காவல் ஆய்வாளர் பவுலோசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் பவுலோஸ், தற்போது திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News