பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினர்

Update: 2023-12-15 03:35 GMT

மாணவர் பள்ளியில் சேர்ப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ராணி ஆகியோர்கள் இணைந்து  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், வேப்பூர் மற்றும் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள தனியார் வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வந்த ஒரு குழந்தை தொழிலாளியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சிறுவனை விசாரித்த போது அவர் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாக 10 -ம் வகுப்பு படிக்காமல் பள்ளியில் இருந்து நின்றுவிட்டதாகவும் குடும்பத்தின் வறுமை காரணமாக தற்போது பணி செய்துவந்ததாகவும் கூறிய நிலையில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் ஆகியோர் இணைந்து அச்சிறுவனை மீண்டும் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர்த்து இடைநின்ற கல்வியை மேற்படி மாணவருக்கு மீண்டும் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News