திண்டுக்கல்லில் வாழைக்காய் விலை உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாழைப்பழம் மற்றும் வாழைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Update: 2024-04-26 15:22 GMT

வாழைக்காய் வாங்க குவிந்த வியாபாரிகள்

திண்டுக்கல் அருகே நத்தம், ஆத்தூர், தர்மத்துப்பட்டி, சுரைக்காய்பட்டி, மல்லையாபுரம், கன்னிவாடி, எரியோடு குஜிலியம்பாறை மற்றும் கரூர்,குளித்தலை, தேனி,சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ரூ.300க்கு விற்ற பச்சை வாழைப்பழத்தார் ரூ. 350க்கும், ரூ.250 க்கு விற்ற கற்பூரவள்ளி ரூ.350க்கும், ரூ.200 க்கு விற்ற நாட்டுப்பழம் ரூ. 300க்கும், ரூ.500 க்கு விற்ற செவ்வாழை ரூ.600 க்கும், ரூ.400 க்கு விற்ற ரஸ்தாலி ரூ.600க்கும் விற்கப்படுகிறது.

சில்லரை விலையில் செவ்வாழை ரூ.8 க்கும், பச்சைப்பழம் ரூ.6க்கும், கற்பூரவல்லி, பூவன் ரூ.5 க்கும், ரஸ்தாலி ரூ. 6 க்கும், நாட்டுப்பழம் ரூ.5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News