தென்காசி உழவர் சந்தையில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு
தென்காசி உழவர் சந்தையில் முருங்கைகாய்விலை உயர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Update: 2024-02-19 02:29 GMT
தென்காசி மாவட்டம், தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையயீடு இல்லாமல் விவசாயிகள் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர். இன்று தென்காசி உழவர் சந்தையில் முருங்கைக்காய்- 1 கிலோ 60 ரூபாய் முதல் 90 ரூபாய், சின்ன வெங்காயம் - ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.