அதிகரித்தது பூக்களின் விலை

கடந்த ஒரு மாதங்களாக பூக்களின் விலை அடிமட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

Update: 2024-02-17 10:29 GMT

 கடந்த ஒரு மாதங்களாக பூக்களின் விலை அடிமட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. 

மல்லி கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 300 ரூபாய் அதிகரித்து 1100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது சம்பங்கி பூ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது பன்னீர் ரோஸ் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  அரளிப்பூ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 அதிகரித்து 70 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது கனகாம்பரம் 700 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 300 அதிகரித்து 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது சாமந்திப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 80 விற்பனை செய்யப்பட்டு வருகிறது சாதி மல்லி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 அதிகரித்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது சாக்லேட் ரோஸ் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 20 அதிகரித்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பல்வேறு மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து சராசரியாக உள்ளது.

    கடந்த ஒரு மாதங்களாகவே பூக்களின் விலை அடிமட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது நேற்று கிருத்திகை முன்னிட்டு பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளதாகும். நேற்று விற்பனை சராசரியாக இருந்ததாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர் வரும் திங்கள் கிழமை அன்று திருமண நாளை முன்னிட்டு பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது விற்பனையாளர்கள் கருத்து..

Tags:    

Similar News