களரம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டினர்.
களரம்பட்டியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டினர்
பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களரம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் சுதாகர் வயது 50. மேலும் ஊராட்சி செயலாளராக கணேசன் வயது 57, என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி களரம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு, சின்டெக்ஸ் டேங்க் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலை சுற்றி உள்ள சாக்கடையின் மேல்பகுதி முழுவதையும் மூடி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை மூடி பூட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அதனை ஏற்று பொது மக்கள் அலுவலகத்தை திறந்துவிட்டனர். அ
டிப்படை கோரிக்கையை வைத்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.