சிறுவனை அத்துமீறி இழுத்துச் சென்ற நபரை சுற்றிவளைத்த பொதுமக்கள்

வள்ளவிளையில் சிறுவனை அத்துமீறி பிடித்து சென்ற நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-02-29 08:19 GMT

 வள்ளவிளையில் சிறுவனை அத்துமீறி பிடித்து சென்ற நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  

குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியில் ஒரு நபர் சிறுவன் ஒருவனை இழுத்துக் கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் சிலர் சேர்ந்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து சிறுவனை மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற கொல்லங்கோடு போலீசார் அந்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் மனநோயாளி என்று தெரியவந்தது. இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் கூறுகையில், - வடநாட்டில் உள்ள மனநோயாளிகளை அங்குள்ளவர்கள் கன்னியாகுமரி கொண்டு வந்து மீன கிராமங்களில் இரவு வேளைகளில் விட்டு செல்கின்றனர்.இரவு வேளைகளில் மேற்கு கடற்கரை சாலையில் மனநோயாளிகளை இறக்கிவிட்டு செல்வது குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் தர வேண்டும் என்று கூறினார்கள்.

Tags:    

Similar News