திருட முயன்ற வாலிபரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

காவேரிப்பட்டினம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுதியுள்ளது.

Update: 2024-03-18 02:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த நரிமேடு கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ். இவர் காவேரிப்பட்டினம் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார். மேலும் தனது வீட்டின் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் பூச்செடிகளை வைத்து பராமரிப்பு பணிகள் செய்து அதில் கிடைக்கும் பூக்களை பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில் நாள்தோறும் பவுன்ராஜ் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் மகன் பெரியசாமி மருமகள் பவித்ரா மற்றும் பத்திற்கும் மேற்பட்ட கூலி ஆட்கள் அவரது நிலத்தில் உள்ள பூச்செடிகளில் பூக்களில் பறித்து பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில் இன்று வழக்கம் போல் காலை பூந்தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த பொழுது பவுண்ராஜ் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் ஆகியோர் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் உள்ள அவரது மகளை பார்க்க சென்றுள்ளனர்

அப்பொழுது மருமகளிடம் கூலி ஆட்களுக்கு டீ வைத்துக் கொடுக்குமாறு கூறிவிட்டு பவுண்ராஜ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது டீயை கொண்டு சென்று கூலியாட்க்கள் கொடுத்த பொழுது மேலும் இரண்டு பேருக்கு டீ பத்தவில்லை என மீண்டும் டீ வைக்க வீட்டிற்கு வந்துள்ளார் பவித்ரா, அப்பொழுது வீடு திறந்து இருந்ததை கண்டு சந்தேகித்த அவர் மெதுவாக வீட்டில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் கையில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளார்

அப்பொழுது அவரை கீழே தள்ளிவிட்டு அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது பவித்ரா அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவனை வீட்டில் முன்பு இருந்த தூணில் கட்டி வைத்து அங்கிருந்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார் இவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர்ஜெகதாப் அடுத்த பெல்ரமபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து குமார் என்பதும் இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டினம் போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய அந்த நபர் தலைமறைவான நிலையில் அந்த நபர் ஜமேதார்மேடு பகுதியி்ல் உள்ள பள்ளியின் மேல் பதுங்கி இருந்த நிலையில் போலீஸார் தேடுவதை அறிந்த அங்கிருந்த சிறுவர்கள் அந்த நபர் மறைந்து இருப்பதை கூறியதின் பேரில் அவரை சுற்றி வளைத்த காவேரிப்பட்டினம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News