இண்டியா கூட்டணியின் ஆட்சிக் கனவு தகர்ந்துள்ளது - கருப்பு முருகானந்தம்

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இண்டியா கூட்டணியின் ஆட்சிக் கனவு தகர்ந்துள்ளது என, பாஜ., மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

Update: 2023-12-14 16:09 GMT
பாஜ., மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இண்டியா கூட்டணியின் ஆட்சி கனவு தகர்ந்துள்ளது என பாஜ.,  மாநிலப் பொதுச் செயலாளர் -  தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இண்டியா கூட்டணி மூலம் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற கனவோடு காங்கிரஸ் கட்சியினர் இருந்து வருகின்றனர். ஆனால், பாஜக அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், அவர்களின் கனவு தகர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அண்மையில், காங்கிரஸ் கட்சி எம்.பி. தீரத் சாகுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.350 கோடிக்கு மேல் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தியோ, சோனியா காந்தியோ சொல்லவில்லை. காங்கிரஸ் அமைத்துள்ள இண்டியா கூட்டணி, ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அந்த கூட்டணிக் கட்சியில் உள்ளவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அறிக்கையில் கூறியது போல, காஷ்மீரை ஒருங்கிணைந்த இந்தியாவுடைய ஒருபகுதியாக உருவாக்கியுள்ளார்.

அதேபோல, பெரும்பான்மையான மக்களின் கனவான, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி முடிந்துவரும் ஜன. 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, தான் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News