மாயமான 3 மாத குழந்தையை தேடும் பணி தீவிரம்
சென்னையில் மாயமான 3 மாத குழந்தையை போலீசார் குப்பை கிடங்கில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 09:22 GMT
மாயமான 3 மாத குழந்தையை தேடும் பணி தீவிரம்
மதுரவாயலில், 3 மாத குழந்தை மாயமான சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன், குழந்தையின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த அஞ்சலி என்பவரது குழந்தை கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மஞ்சள் நிற கவரில் சுற்றி குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்ததா? அல்லது அஞ்சலியே குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மதுரவாயல் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பெருங்குடி குப்பை கிடங்கில் குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.