குத்தாலம் கிடக்கும் கடைவீதி சாலை
குத்தாலத்தில் 6 மாதகாலமாக சாலை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 11:58 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்_பந்தநல்லூர் சாலை 6 மாதத்திற்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணிக்காக இயந்திரம் மூலம் சுரண்டினர்.
ஆனால் இதுவரை எந்த பணியும் துவங்காமல் அன்றாடம் இந்த சாலையை பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சருக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது, அதுவும் சற்று வேகமாக சென்றால் ஒரு புறமாக இழுத்து சென்று எண்ணற்றவவர்கள் விழுந்து பாதிப்படைந்து வருகின்றனர் .
ஆகையால் உடனடியாக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்து சீர் செய்து பொது மக்கள் நலன் காக்க வேண்டும் என பாமக மாவட்ட பொறுப்பாளர் விமல் கோரிக்கை விடுத்துள்ளார்.