கண்மாய்க்கு செல்லும் ஓடை ஆக்கிரமிப்பு இல்லை - உரிமையாளர்
கண்மாய்க்கு செல்லும் ஓடை ஆக்கிரமிப்பு இல்லை என இடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.;
Update: 2023-12-23 11:14 GMT
ஓடை ஆக்கிரமிப்பு இல்லை
வத்தலக்குண்டு : விராலிப்பட்டியில் ஒருவர் சிறுநாயக்கன் கண்மாய்க்கு செல்லும் ஓடையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாக கிராமத்தினர் கூறினர். இது சம்பந்தமாக கட்டட உரிமையாளர் வழக்கறிஞர் சிவக்குமார் கூறியதாவது: எங்களது பட்டா இடத்தில் தான் கட்டடம் அமைத்துள்ளோம். கிராமத்திற்கு ரோடு போடுவதற்கு இடம் கேட்டதால் தாத்தா காலத்தில் எங்களுடைய இடத்தை கொடுத்தோம். ரோட்டுக்காக எங்களது இடம் கொடுக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஏன் ஓடையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுகிறோம். நெடுஞ்சாலை துறை அளந்து கற்களை ஊன்றி சென்றுள்ளனர். கட்டடம் முழு பட்டா இடத்தில் உள்ளது என்றார்.