கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தகராறை தடுத்தவரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-02 09:52 GMT
கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் சேட்டு என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமாருக்கும் (வயது 25) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த வினோத் (37) தகராறை விலக்கி விட்டுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த மதன்குமார் கத்தியால் வினோத்தை சரமாரியாக வெட்டினார்.இதுகுறித்து வினோத் ஆரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.