முதியோரிடம் சங்கிலி பறித்த திருடன்: விரட்டி பிடித்த மக்கள்
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே நடந்து சென்ற முதியவரை தண்ணீரில் பார்த்து நடந்து செல்லுங்கள் என்று கூறி தண்ணீரில் மூழ்கி தாக்கியதுடன் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பரித்து சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
தூத்துக்குடி சால்ட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்சன் இவர் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக வீட்டிற்கு பால் வாங்குவதற்காக திருச்செந்தூர் ரோடு காமராஜ் காலேஜ் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார் பாலை வாங்கி கொண்டு சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் முதியவர் டேவிட்சன் வந்து கொண்டிருந்தபோது அப்போது டேவிட்சனை பின் தொடர்ந்து வந்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற வாலிபர் தண்ணீரை பார்த்து நடங்கள் மாமா என்று கூறி அவரை கீழே தள்ளி தாக்கியதுடன் தண்ணீருக்குள் மூழ்கடித்து அவரது கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து தப்பி ஓடிய வினோத்தை அருகே நின்ற பொதுமக்கள் விரட்டி பிடித்து தரும அடி கொடுத்து அறுத்து சென்ற ஐந்து பவுன் செயினை மீட்டு டேவிட்சனிடம் கொடுத்தனர் இதை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட வினோத்தை தென்பாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் ஏற்கனவே வேதனையில் இருக்கும் சூழ்நிலையில் முதியவரை தண்ணீரில் கீழே தள்ளி செயினை வாலிபர் பறித்துச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது