மத்திய பா.ஜ., அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-29 06:08 GMT
கள்ளக்குறிச்சியில் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து தொ.மு.ச.,உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.தொ.மு.ச., மாவட்டத் தலைவர் திராவிடமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்பழகன், ஏழுமலை, வளர்மதி, சண்முகம், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.