செப்டிக் டேங்க் கழிவு ஓடையில் கொட்டிய வாகனம் சிறை பிடிப்பு

மார்த்தாண்டத்தில் செப்டிக் டேங்க் கழிவு ஓடையில் கொட்டிய வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.

Update: 2024-02-17 13:56 GMT
மார்த்தாண்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட செப்டி டேங்க் கழிவு வாகனம்

.  தமிழக அரசின் உத்தரவுபடி வீட்டில் உள்ள கழிவு மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு ஓடைகளில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் மழைநீர் வடிகாலில் உறிஞ்சி குழாய்கள் அமைத்து மண்ணுக்குள் விடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.      மேலும் சாலைகளில் உள்ள ஓடைகளிலும் கழிவு நீர் திறந்து விடுடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து அந்த குழாய்கள் அடைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.       

இந்த நிலையில் நேற்று இரவு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை தனியார் வாகனங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு ம பம்மம் பகுதி ரத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஓடையில் கொட்டினர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசவே, குழித்துறை  நகராட்சி கவுன்சிலர் ரத்தினமணி தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.        இதை அடுத்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு வாகனம் மற்றும் ஓட்டுனரை குழித்துறை நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News