கிராம மக்கள் லாரியை சிறை பிடித்து ஒரு மணி நேரமாக போராட்டம்

மதுராந்தகம் அருகே விபத்து ஏற்படுத்திய கல் குவாரிக்கு சொந்தமான லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து ஒரு மணி நேரம் போராட்ட நடத்தினர்.

Update: 2024-04-19 11:29 GMT

மதுராந்தகம் அருகே விபத்து ஏற்படுத்திய கல் குவாரிக்கு சொந்தமான லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து ஒரு மணி நேரம் போராட்ட நடத்தினர்.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஜமீன் எண்டத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி லாரி ஜெமின் எண்டத்தூர் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த P V களத்தூர் அருகே உள்ள சாலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் வயசு (28 ) என்பவர் மீது லாரி மோதியதில் இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்... அப்பகுதி மக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து லாரி சிறைபிடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கனகராஜுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.அவரது மனைவியை அழைத்து வர அவரது அக்கா விடான கொள்ளம்பாக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது... இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி லாரியால் இளைஞர் ஒருவர் லாரி மோதி விபத்தில் பலியானார்.. தொடர்ந்து கல்குவாரி லாரிகளால் விபத்து ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News