நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மீட்கபட்ட நகைகளை கணக்கிடும் பணி துவக்கம்

கொள்ளை சம்பவத்தில் மீட்கபட்ட நகைகளை கணக்கிடும் பணி துவங்கியது.;

Update: 2023-11-30 11:31 GMT

நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மீட்கபட்ட நகைகளை கணக்கிடும் பணி துவக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை: பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கணக்கிடும் பணி நடைப்பெற்று வருகிறது.

காந்திபுரம் பிரபல நகைக்கடையில் கடந்த திங்கட்கிழமை இரவு கடைக்குள் புகுந்த ஒற்றை நபர் 200 பவுனுக்கு மேலான தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பித்து சென்றார். கொள்ளையனை பிடிக்க மாநகர காவல்துறை சார்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் தப்பித்து சென்ற கொள்ளையன் அணிந்திருந்த சட்டையை கடையில் விட்டுச் சென்றதால், சட்டை பையில் அவர் பயணித்து வந்த அரசு பேருந்து டிக்கெட் இருந்ததால் அதன் அடிப்படையிலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து கொள்ளையன் வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கு விசாரணை நடத்தியபோது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் வயது 25 என தெரியவந்தது. இவருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளது. இதையடுத்து தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை போலீசார் மீட்டனர். போலீசார் தொடர்வதை அறிந்து கொண்ட விஜயகுமார் தப்பித்து ஓடியதாகவும், அவரை பிடிக்க தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News