தருமபுரியில் முதல்வர் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
தமிழக முதல்வர் ஜூலை மாதம் தர்மபுரி மாவட்டம் வருகை தர உள்ளதை அடுத்து நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 08:51 GMT
ஆய்வு பணியில் ஆட்சியர்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற ஜூலை மாதம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர உள்ளதை அடுத்து அதற்கான இடம் தேர்வு செய்யும் வகையில் தர்மபுரி மாவட்டம் நல்ல மொழி வட்டத்துக்குட்பட்ட பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில்,
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS தலைமையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம். பெ. சுப்ரமணி Ex. MLA பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் கௌதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்