பேராவூரணி அருகே நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம் 

பேராவூரணி அருகே நடுவிக்கோட்டையில்,ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-24 05:46 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ,  பட்டுக்கோட்டை ஒன்றியம்,  நடுவிக்கோட்டை ஊராட்சியில், தேவர் குடியிருப்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதிய  பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை   பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்வில், பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் பழனிவேல, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது, ஊராட்சித் தலைவி அன்பு ரோஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ராசாத்தி முத்தமிழ் செல்வன், பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்  சுவாமிநாதன், உதவி பொறியாளர் ஆர்.லதா, நடுவிக்கோட்டை கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News