வீட்டின் முன்பு நின்ற தொழிலாளி பைக் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை தொழிலாளி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.;
Update: 2024-04-22 05:36 GMT
வீட்டின் முன்பு நின்ற தொழிலாளி பைக் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்பு காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து லட்சுமணன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.