அரூரில் கம்பு விளைச்சல் அமோகம்

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பு விளைச்சல் அமோகம் விலை குறைய வாய்ப்பு

Update: 2024-04-24 04:45 GMT

 கம்பு சாகுபடி 

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் சுற்றுவட்டார பகுதிகளான மொரப்பூர்,கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பு சாகுபடி மற்றும் விளைச்சல் அதிகரித்துள்ளது 1 ஏக்கருக்கு 1 கிலோ கம்பு மட்டுமே விதைக்க பயன்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் 10 மூட்டை கம்பு கிடைப்பதால் தற்போது விளைச்சல் நன்றாக உள்ளதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் கம்பு விலை குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ராகி பயிலை போல கம்பையும் நியாய விலை கடைகளில் வழங்கினால் கம்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
Tags:    

Similar News