வழக்கை வாபஸ் பெற கேட்டு வாலிபர்கள் கொலை மிரட்டல் !

வழக்கை வாபஸ் பெற கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-11 06:02 GMT
கைது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பேச்சிநாதன் (23) எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். இவருக்கும் கீழத்தெருவை சேர்ந்த மெக்கானிக் நாராயணன் என்பவருக்கும்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் நாராயணன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.  நேற்று முன்தினம் பேச்சிநாதன் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாராயணன் அவரிடம் வழக்கை வாபஸ் பெற கேட்டுதகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்து பேச்சிநாதன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணனை கைது செய்தனர். இதற்கு இடையே நாராயணனை பிடிக்க சென்றபோது ஒரு போலீஸ்காரரின்  மோட்டார் சைக்கிளை நாராயணன்  சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாகவும் நாராயணன் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News