காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நிறைவு நாளான தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-05-30 13:15 GMT

தீர்த்தவாரி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 10 நாள் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மே 20-ம் தேதி தொடங்கியது. மே 22 ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி தேரோட்டமும் நடை பெற்றது. உற்சவத்தின் 9-ம் நாளான இன்று கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.இதையொட்டி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று அத்திவரதர் குடி கொண்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஹரிவரதர் இறங்கி தீர்த்தவாரி கண்டார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராடினார்.

பின்னர் வரதராஜர் பக்தர்கள் புடைசூழ உற்சவர் அறைக்கு புறப்பட்டார். இவ்விழாவையொட்டி கோயில் குளத்தைச் சுற்றி 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வரதப் பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் பிரம்ம உற்சவ விழாவில் நிறைவு நாளான தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக ஆனந்த சரஸ்குளத்தில் படிக்கட்டில் காத்திருந்து தீர்த்தவாரியை கண்டு களித்து பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழு போலீசார் குளத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News