டீக்கடையில் திருட்டு - இருவர் கைது

திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள டீக்கடையின் பூட்டை உடைத்துரூ, 60 ஆயிரம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-15 07:29 GMT

பைல் படம் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருக்கு சொந்தமாக டீக்கடை அமைந்துள்ளது. இதில் டீ மாஸ்டராக அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா(34). என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் அதிகாலை டீ கடையை திறக்க வந்த ராஜா, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் மஞ்ச பையில் 60ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் நகர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவை போலிசார் ஆய்வு செய்தனர். அதில், கடை திறக்க சிறிது நேரத்துக்கு முன்பாக ஒருவர் கடையில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும் மற்றொருவர் கடையின் வெளியே காவலுக்கு நின்றதும் தெரியவந்தது.

அதனை ஆதாரமாகக் கொண்டு போலீஸ் தீவிரமாக தேடிவந்தனர அப்போது திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் கோட்டை தெருவை சேர்ந்த கலில்(30) மற்றொருவர் சேர்ந்த தபேதார் முத்துசாமிதெரு பகுதி சார்ந்த பிரபாகரன்(39) என்பதும், இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News