கங்கைகொண்டானில் தொழிலாளி வீட்டில் திருட்டு
கங்கைகொண்டான் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Update: 2023-12-26 05:20 GMT
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அணைத்தலையூர் காலனி தெருவை சேர்ந்தவர் திருப்பா செல்வி (41). தொழிலாளியான இவர் வேலைக்காக நேற்று வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்தவர் பீரோவை திறந்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த 2.45 பவுன் நகை திருடு போனது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.