காரில் 800 கிலோ கருப்பட்டி திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

உடன்குடி அருகே காரில் 800 கிலோ கருப்பட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-06-27 04:49 GMT
காரில் 800 கிலோ கருப்பட்டி திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

பைல் படம் 

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே காரில் 800 கிலோ கருப்பட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள தாங்கை பண்டாரபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் கந்தபுரம் பகுதியில் பனைத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி நள்ளிரவு இவரது பதனீர் காய்ச்சும் குடிசைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 800 கிலோ கருப்பட்டியை காரில் ஏற்றியுள்ளனர்.  அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் சத்தம் போட்டுள்ளனர். ஆனாலும் அதற்குள் மர்ம நபர்கள் காரில் கருப்பட்டியுடன் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைதேடிவருகின்றனர்.
Tags:    

Similar News