அடுத்தடுத்த கடைகளில் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்
ஆத்தூர் அருகே ஆயில் ஸ்டார் மற்றும் அரிசி கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கணேசன் மகன் அன்பழகன் என்பவர் பாமாயில் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையின் அருகில் செந்தில்குமார் என்பவர் அரிசி கடை நடத்தி வருகிறார் காலையில் மீண்டும் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் மேற்கூரை உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் அதிலிருந்து மூன்று லட்சத்தி 62 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து செந்தில்குமார் அரிசி கடையிலும் மேற்கூறையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் அவரது கடையில் இருந்த 23 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.தற்போது கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் வெளியில் இருந்த மரத்தின் வழியாக இளைஞர் ஒருவர் மேலே ஏறி மேற்கூறையை பிரித்து அரை நிர்வாணத்தோடு ரொக்கத்தை திருடும் காட்சி இருந்துள்ளது இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.