அறந்தாங்கியில் இரண்டு கடைகளில் திருட்டு
அறந்தாங்கியில் இரண்டு கடைகளில் திருடபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இந்தக் கடைகளைத் திறக்க உரிமையாளர்கள் வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்த ரூ. 56,000, சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ. 30,000 ஆகியவை திருடு போயிருந்தன.
தகவலறிந்து வந்த அறந்தாங்கி காவல்துறையினர், அருகிலிருசிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, பக்கத்திலிருந்த கடையையும் உடைக்க முயற்சித்து முடியாமல் அவர்கள் திரும்பியது பதிவாகியிருந்தது.
மேலும், இத் திருட்டுல் ஈடுபட்ட இரு திருடர்களும் முகமூடி அணிந்தும், கை-கால்களில் உறைகள் அணிந்து கடப்பாறையுடன் வந்ததும் கண்டறியப்பட்டது. அறந்தாங்கி குற்றப் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.