மளிகை கடையில் பணம் திருட்டு
கெங்கவல்லி- மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 07:10 GMT
மளிகை கடையில் பணம் திருட்டு
கெங்கவல்லி:மளிகை கடையின் மேற்கூரையை உடைத்த மர்ம நபர்கள், 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். ஆத்துார் அருகே, நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாநிதி, 50. இவர், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், கடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை, 7:00 மணியளவில் கடையை திறந்தபோது, மேற் கூரை உடைத்திருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது, டிராவில் வைத்திருந்த, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதேபோல், அருகில் உள்ள சரவணன் என்பவரது கடை பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.