பூட்டியிருந்த வீட்டிற்குள் பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அரியலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய மர்மநபர்ககளை போலீசார் தேடி வருகின்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 07:16 GMT
பூட்டியிருந்த வீட்டிற்குள் பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். இவர் சம்பவதன்று வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு உரம் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கலையரசன் அவர்களை பிடிக்க முயன்றபோது, தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தா.பழூர் போலீசார் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பணத்தினை திருடி சென்ற மர்மநபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.