கோயில் ஆடுகள் திருட்டு - கிராம மக்கள் போராட்டம்

பொன்னமராவதி அருகே கோவிலில் வளர்க்கப்பட்ட 10 ஆடுகள் திருட்டு போன சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-10 09:46 GMT

முற்றுகை போராட்டம் 

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் ஊரின் தேவைக்காக ஊர் ஆடு என்ற பெயரில் கோயில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் மூலம் கிடைக்கும் வருவாயை கிராமத்துக்கும், கோயில் செலவுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆடுகளை பராமரிக்க பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 10 ஆடுகள் திருடு போயின. ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்க கோரி பொன்னமராவதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஊர் கமிட்டி தலைவர் சீனிவாசன் தலைமையில் ஊராட்சி தலைவர் ராமாயி, ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜமாணிக்கம், ராமச்சந்திரன், மற்றும் பொதுமக்கள் திரண்டு பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் சந்தேப்படும் நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் மனு அளித்தனர்.

Tags:    

Similar News