8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தொழுகை..!

மருதநாயகத்தின் கால்களை புதைத்த பள்ளிவாசலில் தொழுகை

Update: 2024-03-09 14:44 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தொழுகை நடைபெற்றது.

பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் உள்ளது. மருதநாயகத்தின் இரண்டு கால்கள் பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பழமையான பள்ளிவாசல் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

பழைய பள்ளிவாசல் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ள தருணத்தில், பள்ளிவாசல் வளாகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தொழுகை நடைபெற்றது. அதை கரூர் மாவட்டம் அரசு டவுன் காஜி சிராஜ்தீன் அஹ்மது தொழுகையை தொடங்கி வைத்தார்.

இந்த முதல் தொழுகையில் பெரியகுளம் பகுதியில் இருந்த ஏராளமான ஜமாத் தலைவர்கள் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பெரியகுளம் நவாப் ஜாமிஆ மஸ்ஜித் தலைவர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News