இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார்!
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனம் திருடப்பட்டதால் அதிர்ச்சி;
Update: 2024-02-28 13:55 GMT
இருசக்கர வாகனம் திருட்டு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மூர்த்தி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் சுபேந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தை தினமும் வீட்டின் முன் நிறுத்தி வைப்பது வழக்கம். சுபேந்திரன் கடந்த 22ஆம் தேதி இரவு வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்க சென்றார்.
காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவர் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.