3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி - அமைச்சர் நம்பிக்கை

தென்காசியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெறுவார் என்றும், அந்த வெற்றியோடு தமிழ்நாடு முதல்வரிடம் மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சங்கரன்கோவிலில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தெரிவித்தார்.

Update: 2024-03-25 06:27 GMT
வேட்பாளர் அறிமுக கூட்டம்  

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் வைத்து தென்காசி பாராளுமன்ற இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டாக்டர்.ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியினர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது திமுக கூட்டணி உடையாமல் வலுப்பெற்று இருப்பதாகவும், பாஜக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் என்ன செய்யப் போகிறார்களே, எங்கு போனார்களோ, என்ன ஆனார்களோ என ஒன்றும் தெரியவில்லை என்றும், ஆகவே திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் குறிப்பாக தென்காசியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெறுவார் என்றும் அந்த வெற்றியோடு தமிழ்நாடு முதல்வரிடம் மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற டாக்டர்.சதன் திருமலைகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

Tags:    

Similar News