சமையலறை இல்லாததால் வகுப்பறைக்குள் உணவு தயாரிக்கும் அவலம்
கூடலூர் அருகே குன்றில்கடவு துவக்கப்பள்ளியில் சமையலறை இல்லாததால், வகுப்பறைக்குள் உணவு தயாரிக்கும் அவலம் நீடிக்கிறது.;
வகுப்பறைக்குள் உணவு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது உப்பட்டி கிராம். இதன் அருகே குன்றில்கடவு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்கு இருந்த சமையலறை சேதம் அடைந்துள்ளது. இதனால் மத்திய உணவுக்கான சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சமையல் செய்வதற்கான அறை இல்லாததால் மழையின் போது மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளுக்குள்ளும் மழை இல்லாத நாட்களில் பள்ளி வகுப்பறைக்கு வெளியிலும் சமைத்து மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் குன்றில்கடவு பள்ளியில் சமையலறை கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.