ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை: சென்னை காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-06 12:05 GMT

Chennai Police Commissioner Sandeep Roy Rathore

இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பிறகு நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை. தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பாபன நகரமாக உள்ளது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரியான துப்பு கிடைத்த பிறகே 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News