விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் கட்சிக்கு ஆதரவு கிடையாது !

விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் கட்சியை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க தயங்க மாட்டோம் என விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறினார்.

Update: 2024-03-02 12:05 GMT
 விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் கட்சியை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க தயங்க மாட்டோம் என விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறினார்.

விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் O.A. நாராயணசாமி தலைமையில் மாநில, மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் 0. A. நாராயணசாமி, தென்மாவட்டங்களில் அதிகமான கன மழையால் விவசாயிகள். விளைவித்த பயிர்கள் எல்லாம் அழிந்து மழை வெள்ளத்தில் முற்றிலும் அழிந்துவிட்டது, வேளாண்மை துறையினரும். வருவாய் துறையினரும் முறையான பயிர் சேதாரக் கணக்கை எடுக்க வில்லை, இதனால் தென்மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதரம் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

விவசாயிகவின் பொருளாதரம் நஷ்டம் ஏற்ப்பட்டதற்க்கு முக்கியகாரணம் வேளான்மை துறையும். வருவாய் துறையும் தான் என்றும், கடந்த 2023- 24 வரை பெய்த கடைமழையால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் தமிழக அரசு அறிவித்த வெள்ள நிவாரண தொகை ஏக்கருக்கு 3400 இதுவரை விவசாயிகளுக்கு இதுநாள்வரை கிடைக்கவில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் உடனயாக நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். எனவும் அப்படி இல்லாத பட்சத்தில் வருகின்ற 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர் தலில் விவசாயிகளின் கோரிக்கைகளையும், விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தையும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து பேசும் கட்சிக்குக்கு தான் விவசாயிகளின் ஆதரவு என்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியை 2024 தேர்தலில் தோற்கடிக்க தயங்க மாட்டோம் என தெரிவித்தார்

Tags:    

Similar News