பஸ்சின் டயர் பஞ்சர் ஆனதால் பரபரப்பு
காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்தின் டயர் "திடீர்" என்று பஞ்சர் ஆனது.இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.;
Update: 2024-01-19 05:58 GMT
பஸ்சின் டயர் பஞ்சர் ஆனதால் பரபரப்பு
காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் இன்று 12மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்தது.பின்னர் இந்த பஸ் பெரியார் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த பஸ்சின் முன்பக்கம் உள்ள வலது புறம் உள்ள டயர் "திடீர்" என்று பஞ்சர் ஆனது.இதனால் அந்த பஸ் நடுரோட்டில் "திடீர்" என்று நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். உடனே இது பற்றி தகவல் அறிந்ததும் அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்கள் விரைந்து வந்து பஞ்சர் ஆன அந்த டயரை கழட்டி மாற்று டயர் பொருத்தினார்கள். அதன்பிறகு அந்த பஸ் அங்கு இருந்து புறப்பட்டு சென்றது.