மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கிய அமைச்சர் !
81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 11:18 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில், 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ.2.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள். அதன்படி, 69 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் தலா ரூ.96,011 மதிப்பிலும், 12 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் தலா ரூ.1,13,467 மதிப்பிலும் என மொத்தம் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்கள். மேலும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 66 பயனாளிகளுக்கு 35 சதவிகித மான்ய தொகையான ரூ.66.96 இலட்சம் மதிப்பிலான மானியத் தொகைக்கான ஆணைகளையும், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் 166 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானிய தொகையான ரூ.84.72 இலட்சம் மதிப்பிலான மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான மானியத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்கள்.