தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம்,தியாகதுருவத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-25 16:02 GMT

ஒன்றிய குழு கூட்டம்

தியாகதுருகம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., க்கள் துரைமுருகன், செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., கொளஞ்சிவேல் வரவேற்றார்.

குடியரசு தினத்தை அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, லோக்சபா தேர்தலை முன்னிட்டு அனைத்து ஓட்டு சாவடி மையங்களையும் ஆய்வு செய்வது, ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது, அரசின் வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது, கோடை காலம் துவங்குவதால் குடிநீர் பிரச்னைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News